டெல்லியில் சாலையில் உருண்டு நிர்வாணப் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் இன்று கைது செய்யப்பட்டனர்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் கடந்த 28 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பிரதமர் அலுவலகம் அருகே திடீரென நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆடைகளை களைந்து சாலைகளில் உருண்டு போராட்டம் நடத்திய அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இது பற்றி பேசிய அய்யாக்கண்ணு, பிரதமர் இதுவரை எங்களைச் சந்திக்கவில்லை என்பதால் வேறு வழி தெரியவில்லை. பிரதமரை சந்திக்க வைப்பதாகக் கூறி ஏமாற்றிவிட்டனர். இதனால் வேதனையில் தங்கள் ஆடைகளை களைந்து போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார்.