வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி
Published on

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகரில் விவசாயிகள் இன்று பிரமாண்ட பேரணி நடத்துகின்றனர். இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வரும் நிலையில் பேரணியில் பங்கேற்க டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர்.

குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பிறகே பேரணியை தொடங்க வேண்டும் என காவல்துறையினர் நிபந்தனை விதித்துள்ளனர். சில சாலைகளில் விவசாயிகள் வராமல் இருப்பதற்காக பெரிய கான்கிரீட் தடுப்புகளையும் போலீசார் அமைத்தனர்.

சுமார் 100 கிலோமீட்டருக்கு நடைபெறும் டிராக்டர் பேரணி மாலை ஆறு மணிக்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு டிராக்டரிலும் ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பாதுகாப்புப் பணிகளை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com