நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்கபோகிறது விவசாயிகள் சங்கம்!

மார்ச்10ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்கோப்புப்படம்

டெல்லியை நோக்கிய விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "டெல்லியை நோக்கி பேரணி என்ற முடிவை திரும்ப பெற போவது இல்லை. விவசாயிகளின் பலத்தை மேலும் அதிகரித்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.

மார்ச் 6ஆம் தேதி பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி வர உள்ளனர். மார்ச் 10ஆம் தேதி மதியம் 12மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்
'NO FARMER NO FOOD NO FUTURE' - ஐரோப்பியாவிலும் உச்சக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்!

முன்னதாக, விவசாய பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 13ஆம் தேதி முதல் டெல்லியை நோக்கி பேரணியை தொடங்கினர். அந்தப் போராட்டம் தற்போதுவரை தொடர்ந்து கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com