வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு
வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஓராண்டாக நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தின் எதிரொலியாக, 'வேளாண் சட்டங்கள்' கைவிடப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பான சட்டம் இயற்றப்பட்ட நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றபட்டது. இதனையடுத்து இந்த சட்டத்திருத்ததிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில், ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்துள்ளது. டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் நாளை மறுநாள் அவரவர் ஊருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.காசிப்பூர், சிங்கு, டிக்ரி ஆகிய பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கி, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் போராட்டத்தைத் தொடர தேவையில்லை என விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. டெல்லியில் இன்று நடந்த விவசாய சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் போராட்டத்தை கைவிட முடிவெடுக்கப்பட்டது. ''கோரிக்கை அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால் போராட்டத்தை கைவிடுகிறோம்'' என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com