“விவசாயிகள் போராட்டம் அவர்களின் வாழ்வாதாரம் பற்றியது” பா.ரஞ்சித் ட்வீட்
விவசாயிகளின் போராட்டம், அவர்களின் வாழ்வாதாரமான குறைந்தபட்ச ஆதாரவிலையை பற்றியது என்ற உணர்வு நமக்கு இருக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் “நாங்கள் விவசாயிகளுடன் நிற்கிறோம், எனவே, கடந்த சில மாதங்களாக விவசாயிகள் போராடி வரும் காரணத்திற்காக நாங்கள் ஆதரிக்கிறோம். விவசாயிகளின் போராட்டத்தையும் அதன் ஆதரவாளர்களையும் யார் கேள்வி எழுப்பினாலும், விவசாயிகளின் போராட்டம் அவர்களின் வாழ்வாதாரமான குறைந்தபட்ச ஆதாரவிலையை பற்றியது என்ற உணர்வு இருக்க வேண்டும்.
பொறுப்புள்ள மக்களாக நாம் விவசாயிகளின் எதிர்ப்பு குறித்து யார் கேள்வி எழுப்புகிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராக சில விமர்சனங்களை நாங்கள் காண்கிறோம்” என தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்பாக இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்டோரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர்.