டெல்லி விவசாயிகள் போராட்டம் - கண்ணீர் புகை குண்டு வீச்சு
டெல்லி விவசாயிகள் போராட்டம் - கண்ணீர் புகை குண்டு வீச்சுபுதிய தலைமுறை

போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு; போராட்டம் 2 நாட்கள் ஒத்திவைப்பு

டெல்லி அருகே காவல்துறை நடத்திய தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனிடையே போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
Published on

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை தரப்படுவதை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கடந்த 13 ஆம் தேதி முதல் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் - கண்ணீர் புகை குண்டு வீச்சு
டெல்லி விவசாயிகள் போராட்டம் - கண்ணீர் புகை குண்டு வீச்சு

பஞ்சாப்-ஹரியானா எல்லையான கனோரியில் தடுப்புகளை நோக்கி விவசாயிகள் முன்னேறி வந்தநிலையில் பல முறை கண்ணீர் புகைக்குண்டுகளை காவல்துறை வீசியது. இதில் பஞ்சாப் மாநிலம் பதின்டாவை சேர்ந்த 21 வயதான விவசாயி உப்கரண் சிங் உயிரிழந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விவசாயிகள், காவல்துறையினர் இடையே நடந்த மோதலில், காவலர்கள் 12 பேரும், விவசாயிகள் பலரும் காயமடைந்தனர். இதனிடையே டெல்லியை முற்றுகையிடும் பேரணி 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக விவசாய சங்கங்களின் தலைவர்களில் ஒருவரான சர்வான் சிங் சந்தேர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே போராட்ட களத்தில் காவல்துறை நடத்திய தாக்குதலில் விவசாயி உயிரிழந்துள்ளது வேதனை அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்திட்விட்டர்

மேலும், “கடந்த முறை போராட்டத்தின்போது 700 விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தபிறகுதான் மோடி அரசு விவசாயிகள் கோரிக்கையை ஏற்றது. விவசாயிகள் மரணத்திற்கு பாஜக அரசு ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com