புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

டெல்லியில், 7ஆவது மாதத்தை நிறைவு செய்துள்ளது விவசாயிகள் போராட்டம். "தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்" என விவசாயிகள் உறுதியாக கூறியுள்ளனர். போராட்டத்தின் ஒருபகுதியாக, தற்போது டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர் விவசாயிகள். இதற்காக மாநில எல்லைப்பகுதியில், டிராக்டர்கள் யாவும் பேரணிக்கு தயார் நிலையில் உள்ளன.

பேரணி திட்டமிடப்பட்டிருப்பதை தொடர்ந்து டெல்லி - உத்தரப்பிரதேசம் எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரச்னை ஏதும் ஏற்படாமலிருக்க, அப்பகுதி முழுக்க சீல் இடப்பட்டுள்ளது. எந்த டிராக்டரும் டெல்லிக்குள் நுழையக்கூடாது என்பதில், அரசு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறது. இதற்காக, மாநிலத்தில் பல இடங்களில் பெட்ரோல் பங்க் மூடப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் உ.பி. - இரு மாநில காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர், பாதுகாப்புக்காக மாநில எல்லைகளில் குவிந்துள்ளனர். அப்பகுதியிலுள்ள சில மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

டிராக்டர் பேரணி மட்டுமன்றி, அனைத்து மாநில தலைநகரை சேர்ந்த விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் மூலமாக அனைத்து மாநில ஆளுநரையும் நேரில் சந்தித்து 'குடியரசு தலைவர், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும்' என அறிவுறுத்தவும் திட்டமிட்டுள்ளனர். 

இவற்றைத்தொடர்ந்து, மத்திய அரசு தற்போது விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைத்துள்ளது. இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com