\

இழப்பீடு தீர்வல்ல, விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

இழப்பீடு தீர்வல்ல, விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
Published on

விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளின் இழப்பீட்டை முறைப்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது மட்டும் பிரச்னைகளுக்குத் தீர்வாகாது, விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க மத்திய அரசு உரிய வழிமுறைகளைக் கண்டறியவேண்டும் என கூறியுள்ள நீதிமன்றம், மத்திய அரசுக்கு 2 வாரகால அவகாசம் அளித்து வழக்கை மார்ச் 27க்கு ஒத்திவைத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com