ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயக் கடன் தள்ளுபடி: ராகுல் உறுதி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “15 தொழிலதிபர்களுக்கு 1,30,000 கோடி ரூபாய் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்திருக்கிறார். குஜராத்தில் பிரதமர் மோடியின் சகாக்களும், தொழிலதிபர்களுக்கு மட்டுமே உதவி செய்கின்றனர். ஆனால் பொதுமக்களோ வேலையில்லா திண்டாட்டத்தில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். மேலும் பொதுமக்களுக்கு வங்கிக்கடன்கள் சுலபமான முறையில் கிடைக்க வழிவகை செய்யப்படும். சிறு தொழில்களுக்கு உதவி செய்வதன் மூலம் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.