3 ஆண்டுகளில் மட்டும் மகாராஷ்டிராவில் 7,484 விவசாயிகள் தற்கொலை - மத்திய அரசு ரிப்போர்ட்

3 ஆண்டுகளில் மட்டும் மகாராஷ்டிராவில் 7,484 விவசாயிகள் தற்கொலை - மத்திய அரசு ரிப்போர்ட்
3 ஆண்டுகளில் மட்டும் மகாராஷ்டிராவில் 7,484 விவசாயிகள் தற்கொலை - மத்திய அரசு ரிப்போர்ட்

கடந்த 3 ஆண்டுகளில் மகராஷ்டிராவில் மட்டும் 7,486 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த 3 ஆண்டுகளில் நடந்த விவசாயிகள் தற்கொலை குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் உறுப்பினர்கள் சார்பில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2018ம் ஆண்டு நாடு முழுவதும் 5,763 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2019ம் ஆண்டு 5,957பேரும், 2020ம் ஆண்டு 5579 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த 3 ஆண்டுகளிலும் மகாராஷ்டிராவில் தான் விவசாயிகள் தற்கொலை அதிகமாக காணப்படுகிறது.

2018ம் ஆண்டு -2239பேரும், 2019ம் ஆண்டு - 2680பேரும், 2020ம் ஆண்டு- 2567பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 2018ம் ஆண்டு 6 பேரும், 2019ம் ஆண்டு 6 பேரும், கடந்தாண்டு 79 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

'பருவமழை சரியான நேரத்தில் பெய்யாதது, பயிர்கள் வீணாகி நஷ்டம் விளைவிப்பது, உறுதியான நீர் ஆதாரங்கள் இல்லாமல் இருப்பது, பயிர்கள் மீதான பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் ஆகியவை விவசாயிகளின் தற்கொலைக்கு காரணங்களாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியுள்ள பதிலில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com