“அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது” - பாலிவுட் பிரபலங்கள் கோரிக்கை

“அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது” - பாலிவுட் பிரபலங்கள் கோரிக்கை
“அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது” - பாலிவுட் பிரபலங்கள் கோரிக்கை

அயோத்தி நில வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருந்தாலும், எதிராக இருந்தாலும் எல்லா தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று பாலிவுட் நட்சத்திரங்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக மாற்று இடம் 5 ஏக்கர் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதையொட்டி நாடு முழுவதும் அமைதி காக்கப்பட வேண்டுமென்று பாலிவுட் நட்சத்திரங்கள் வலியுறுத்தியுள்ளனர். பாலிவுட் நடிகரும், இயக்குநருமான பர்ஹான் அக்தர் தன்னுடைய ட்விட்டரில், “உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று எல்லோரிடமும் கேட்டுக் கொள்கிறேன். இது உங்களுக்கான தீர்ப்பாக இருந்தாலும், எதிராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த விவகாரத்தை எல்லோரும் ஒற்றுமையாக இருந்து கடக்க வேண்டும். ஜெய்ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகையும், காலா பட நாயகியுமான ஹூமா குரேஷி, “என்னுடைய அன்புக்குரிய இந்தியர்களே, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதியுங்கள். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து ஒரே நாடக கடக்க வேண்டும்” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல், குனால் கபூர் தன்னுடைய ட்விட்டரில், “இது அமைதிக்கான நேரம். அதேபோல், ஒற்றுமையாக இருப்பதற்கான நேரம். ஒருவருக்கொருவர் உணர்வுப்பூர்வமாக இருந்து, எல்லோரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவோம்” என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com