’விரட்டிய கெட்ட ஆத்மாக்கள்’: தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை!

’விரட்டிய கெட்ட ஆத்மாக்கள்’: தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை!

’விரட்டிய கெட்ட ஆத்மாக்கள்’: தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை!
Published on

குஜராத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ’கெட்ட ஆத்மாக்கள்’ காரணமாக தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள நரோடாவைச் சேர்ந்தவர் குணால் திவிவேதி (45). தொழிலதிபர். இவர் மனைவி கவிதா. மகள் ஷ்ரீன் (16). இவர்கள் வீட்டுக்கு நேற்று உறவினர்கள் ஃபோன் செய்த போது யாரும் எடுக்கவில்லை. தொடர்ந்து போன் எடுக்கப்படவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த அவர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்த போது, மூவரும் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தனர். குணாலின் அம்மா ஜெயஸ்ரீ பென் (75) மயங்கிய நிலையில் தரையில் கிடந்தார். இதையடுத்து அவர் கள் உடல்களை கைப் பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்த ஜெயஸ்ரீ பென்-னுக்கு தீவிர சோத னை நடந்து வருகிறது. தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரித்து வந்த போலீசார் அந்த வீட்டில் இருந்து மூன்று பக்க கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர். 

இந்தியில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், ‘எல்லோரும் என்னை குடிகாரன் என்று அழைக்கிறார்கள். குடிக்க வேண்டும் என்று விரும்பி நான் அதை செய்யவில்லை. ’கெட்ட ஆத்மாக்கள்’ என் பலவீனத்தைப் பயன்படுத்தி இப்படி செய்ய வைக்கின்றன. அம்மா, என்னை நீ புரிந்து கொள்ளவில்லை. முதல் நாளே, நீ என்னை புரிந்துகொண்டிருந்தால் என் வாழ்க்கை இன்று வேறு மாதிரியாக இருந்திருக்கும். தற்கொலை என்ற வார்த்தை என் அகராதியில் இல்லை. பலமுறை கெட்ட ஆத்மாக்கள் பற்றி உன்னிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் நீ நம்பவில்லை’ என்று எழுதப்பட்டிருக்கிறது.

இதனால் குணால் மந்திர சக்தி விஷயங்களில் அதிகம் பாதிக்கப்பட்டு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றன ர். இந்த குடும்பத்தினருக்கு கடன் தொல்லை ஏதும் இல்லை என்றும் பலருக்கு குணால் கடன் கொடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த மந்திர சக்தி விஷயம் காரணமாக டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com