பேய் பயத்தில் ஊரை காலி செய்த மக்கள்: தெலங்கானாவில் சோகம்!

பேய் பயத்தில் ஊரை காலி செய்த மக்கள்: தெலங்கானாவில் சோகம்!

பேய் பயத்தில் ஊரை காலி செய்த மக்கள்: தெலங்கானாவில் சோகம்!
Published on

பெண் பேய் பயத்தில் கிராமத்தை காலி செய்துவிட்டு மக்கள் சென்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ளது காசிகுடா கிராமம். இங்கு சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு கல் உடைப்பது தொழில். இவர்கள் வசிக்கும் பகுதியில் இரவு நேரங்களில் பெண் பேய் உலவுவதாக பீதி ஏற்பட்டது. பேய் உலவுவதையும் அந்தப் பேய், ஊரில் இருக்கும் ஆண்களை மட்டும் குறி வைத்து தாக்குவதாகவும் ஊர்க்காரர்கள் நம்பினர். பீதியை ஏற்படுத்தும் அந்தப் பெண் பேய் பற்றி தினமும் ஒரு கதை கிளம்பியதால் மொத்தக் குடும்பமும் ஊரைக் காலி செய்துவிட்டு அருகில் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுள்ளது. பசுமை வாய்ந்த அந்தக் கிராமம் இப்போது பேய் வசிக்கும் இடமாக மாறியிருக்கிறது. 
யாரும் துணிந்து ஊருக்குள் செல்ல பயப்படுகின்றனர். பேய் பயத்தில் ஒரு கிராமமே ஊரைவிட்டு வெளியேறியிருப்பது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com