
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில், ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி, இந்திரஜித் சக்ரவர்த்தி என்ற பெயரில் உள்ள ஒரு ட்விட்ரில் செய்தி வெளியாகி இருந்தது.
ஆனால் அது ரியாவின் தந்தையின் ட்விட்டர் கணக்கு இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. ரியா தொடர்பாக இந்த ட்விட்டரில் தொடர்ச்சியாக கருத்து பதிவிடப்பட்டு வரும் நிலையில் இது ரியாவின் தந்தை கணக்கு இல்லை என்பதும் போலி என்பதும் உறுதியாகி இருக்கிறது.