\
'புதுச்சேரியில் கள்ள லாட்டரி, போதை பொருள் விற்பனை அமோகம்' - நாராயணசாமி குற்றச்சாட்டு

'புதுச்சேரியில் கள்ள லாட்டரி, போதை பொருள் விற்பனை அமோகம்' - நாராயணசாமி குற்றச்சாட்டு

'புதுச்சேரியில் கள்ள லாட்டரி, போதை பொருள் விற்பனை அமோகம்' - நாராயணசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரியில் கள்ள லாட்டரி, போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும் இது காவல் துறையினருக்கு தெரிந்தே நடக்கிறது என்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் குளறுபடிகள் உள்ளது என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சுட்டிக்காட்டியது. ஆனால், அதை தேர்தல் ஆணையமும் மாநில அரசும் பொருட்படுத்தவில்லை. தங்கள் அறிவிப்பில் தவறு இருந்தது உண்மைதான் என உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு ஒப்புக்கொண்டது. இது புதுச்சேரி அரசுக்கு பெருத்த அவமானம்" என்று நாராயணசாமி தெரிவித்தார்.

இதற்கிடையே புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக முதலமைச்சர், துணைநிலை ஆளுநர், அமைச்சர்கள் ஒரே நேர்கோட்டில் செயல்படுவதை கண்டு நாராயணசாமி வயிற்றெரிச்சலில் இவ்வாறு பேசி வருவதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம் அளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com