இந்தியா
ஏடிஎம்-யில் வெளிவரும் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள்..!
ஏடிஎம்-யில் வெளிவரும் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள்..!
டெல்லியில் உள்ள ஒரு எஸ்பிஐ ஏடிஎம்-யில் இருந்து 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் வந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் ஒருவர் ரூ.8000 எடுக்க டெல்லியின் சங்க விஹார் பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஏம்-யிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் எடுத்த நான்கு 2000ரூபாய் நோட்டுகளிலும் “சில்ட்ரன் பாங்க் ஆப் இந்தியா” என்று அச்சிடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை அதிகாரிகளும் அதே ஏடிஎம்-யில் பணம் எடுத்தபோதும் கள்ள நோட்டுகளே வந்துள்ளன.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.