\
மகாராஷ்டிரா பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக ஃபட்னாவிஸ் தேர்வு 

மகாராஷ்டிரா பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக ஃபட்னாவிஸ் தேர்வு 

மகாராஷ்டிரா பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக ஃபட்னாவிஸ் தேர்வு 
Published on: 

மகாராஷ்டிரா பாஜக சட்டமன்றக் குழுத்தலைவராக ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். 

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகியும், ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக - சிவசேனா இடையே இழுபறி நீடித்து வருகிறது. 

இதனிடையே மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்பார் எனத் தகவல் வெளியாகியது. மகாராஷ்டிராவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் பாஜக தேசிய துணைத் தலைவர் அவினாஷ் ராய் கண்ணா ஆகியோரை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா நியமித்திருக்கிறார்.

இந்நிலையில், இன்று மும்பையில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மகாராஷ்டிரா பாஜக சட்டமன்றக் குழுத்தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com