கேரளாவில் தரையிறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்.. விற்பனை செய்வதாக சமூக ஊடகங்கள் பதிவு!
உலகின் மிக விலையுயர்ந்த பிரிட்டிஷ் ராயல் கடற்படை போர் விமானமான F-35B, கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு அவசரமாக தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து, சுமார் 72 மணி நேரத்திற்கும் மேலாக கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெட் அவசரமாக தரையிறங்கி நிலையில், அது OLXஇல் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும், விமானம் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைக்கு இருப்பதாகவும் சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், OLX இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அத்தகைய பதிவு எதுவும் காணப்படவில்லை. ஆகையால், இதுகுறித்து உண்மை கண்டறியும் குழு, அது ஒரு போலிச் செய்தி எனத் தெரிவித்துள்ளது.
இது, இங்கிலாந்தின் விமானம் தாங்கி கப்பலான HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் ஒரு பகுதியாகும், இது தற்போது இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளுக்காக இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ளது. இந்திய கடற்கரையிலிருந்து சுமார் 100 கடல் மைல் தொலைவில் இருந்த கேரியரில் இருந்து போர் விமானம் புறப்பட்டது. இருப்பினும், மோசமான வானிலை காரணமாக, அது கப்பலுக்குத் திரும்ப முடியவில்லை, மேலும் அருகிலுள்ள விமான நிலையத்திற்கு திருப்பி விட வேண்டியிருந்தது. ஆகையால், இதைச் சரிசெய்யும் பணியில் இந்திய விமானப்படை அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இந்த உண்மையில், இதன் விலை 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.835 கோடி) ஆகும். ஆனால், அதற்குள் இணையவாசிகள் இதன் உண்மையான விலையும் தெரியாமல், அதுகுறித்த செய்தியும் தெரியாமல் வதந்திகளைப் பரப்பியுள்ளனர்.