இனவெறி தாக்குதலுக்கு ஆளானேன்: முதல்வர் வேதனை

இனவெறி தாக்குதலுக்கு ஆளானேன்: முதல்வர் வேதனை

இனவெறி தாக்குதலுக்கு ஆளானேன்: முதல்வர் வேதனை
Published on

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தானே பலமுறை இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக மிசோரம் முதலமைச்சர் லால்தன் ஹவுலா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ‘என்னுடைய தோற்றத்தைப் பார்த்து நான் இந்தியர் போலவே இல்லை என பலர் கேட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநில மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனவெறி தாக்குதல்களே இனவாதத்தின் பிறப்பிடமாக அமைகிறது. வடகிழக்கு மாநில மக்களை மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நானே பலமுறை இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறேன்’ என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com