“#ResignModi ஹேஷ்டேக் பதிவுகளை தவறுதலாக முடக்கிவிட்டோம்” - ஃபேஸ்புக் விளக்கம்

“#ResignModi ஹேஷ்டேக் பதிவுகளை தவறுதலாக முடக்கிவிட்டோம்” - ஃபேஸ்புக் விளக்கம்
“#ResignModi ஹேஷ்டேக் பதிவுகளை தவறுதலாக முடக்கிவிட்டோம்” - ஃபேஸ்புக் விளக்கம்

கொரோனா நடவடிக்கைகள் குறித்து ஃபேஸ்புக்கில் #ResignModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆன நிலையில் அவற்றை ஃபேஸ்புக் நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்காக அலைக்கழிப்பு, ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசிக்கு தட்டுப்பாடு என மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் மத்திய அரசின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியடைந்த பலர் ஃபேஸ்புக்கில் #ResignModi என்ற ஹேஷ்டேகை குறிப்பிட்டு பதிவிட்டு வந்தனர். இந்த ஹேஷ்டேக் உருவாக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மளமளவென பதிவுகள் இடப்பட்டு வந்தன. 

இந்நிலையில் அந்த பதிவுகள் ஃபேஸ்புக் விதிகளுக்கு அப்பாற்பட்டு உள்ளதாக நீக்கப்பட்டது. அதேநேரம் இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் நீக்கப்படவில்லை. இந்த விவகாரம் விமர்சனத்துக்குள்ளான நிலையில், #ResignModi ஹேஷ்டேக் பதிவுகள் தவறுதலாகவே முடக்கப்பட்டுவிட்டதாகவும் மத்திய அரசின் நெருக்கடியால் முடக்கவில்லை என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதனையடுத்து #ResignModi ஹேஷ்டேக் பதிவுகள் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com