தகவல் லீக்: 5.62 லட்சம் இந்தியர்களின் ஃபேஸ்புக் பாதிப்பு
ஃபேஸ்புக் பயனாளிகள் தகவல் கசிவால் இந்தியாவில் சுமார் 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. f
ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் பெற்று பல்வேறு நாட்டு தேர்தல் நடைமுறைகளில் அதைப்பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக ஃபேஸ்புக்குக்கு எதிராகவும் பெரும் சர்ச்சைகள் கிளம்பியது. இதையடுத்து பல்வேறு கேள்விகள் அடங்கிய நோட்டீசை ஃபேஸ்புக்குக்கு, மத்திய அரசு அனுப்பி விளக்கம் கேட்டது.
இதுதொடர்பாக விளக்களித்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், இந்திய தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும், ஃபேஸ்புக் தலையீடு சிறிதளவும் இல்லை என்றும் கூறியிருந்தார். அதேநேரம் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல் பகிரப்பட்டது உண்மை தான் எனவும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் ஃபேஸ்புக் பயனாளிகள் தகவல் கசிவால், இந்தியாவில் சுமார் 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.