அமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

அமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

அமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பேருந்து விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் பேருந்து விபத்தில் உயிரிழந்த சம்பவம் கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி, தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

ஜம்மு காஷ்மீரின் ராம்பான் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில், 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் மீது பயங்கரவாதிகள் கடந்த ஜூலை 10ல் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com