\
குடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

குடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

குடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
Published on: 

தலைநகர் டெல்லியில் குடியரசுதின விழாவையொட்டி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள விஜய்சவுக் பகுதியைச் சுற்றியுள்ள 5 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடக் கூடிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


டெல்லியில் உள்ள முக்கியமான மின்பகிர்மான நிலையங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் போராடும் விவசாயிகளின் இடங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.


ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com