உ.பி மக்களை வாட்டும் குளிர்! ரத்தம் உறைதல், ரத்த அழுத்தத்தால் ஒரே நாளில் 25 பேர் பலி!

உ.பி மக்களை வாட்டும் குளிர்! ரத்தம் உறைதல், ரத்த அழுத்தத்தால் ஒரே நாளில் 25 பேர் பலி!
உ.பி மக்களை வாட்டும் குளிர்! ரத்தம் உறைதல், ரத்த அழுத்தத்தால் ஒரே நாளில் 25 பேர் பலி!

உத்திரபிரதேசத்தில் கடுமையான குளிர் காரணமாக ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 மணிநேரத்தில் 700க்கும் அதிக இதய நோயாளிகள் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் கடுமையான குளிருக்கு ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் கடும் குளிர் அதிகரித்து வருவதால், மாரடைப்பு மற்றும் மூளைச்சாவு காரணமாக நேற்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர்.

லக்னோவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இன்று காலையில் 7 டிகிரி செல்சியஸ் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. உத்திரபிரதேச நகரங்களான கோரக்பூரில் 8.8°C, கெளதம் புத் நகரில் 7.01°C, மெயின்புரி 8.51°C, ஆக்ரா 9.31°C, மீரட் °C, பிரயாக்ராஜ் 7.8°C, வாரணாசி 9.8°C மற்றும் பரேலி 7.4°C அளவிற்கு பனிப்பொழிவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநில இதய சிகிச்சை நிறுவன கட்டுப்பாட்டு அறையின் தகவலின்படி, நேற்று ஒரே நாளில் 723 இதய நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அதில் ஆபத்தான நிலையில் 41 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 7 இதய நோயாளிகள் குளிர் காரணமாக உயிரிழந்ததாகவும், 15 நோயாளிகள் இறந்த நிலையில் அவசர சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 17 பேர் மருத்துவ உதவி வழங்குவதற்கு முன்பே இறந்துவிட்டதாகவும், ஜலதோஷத்தின் போது திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து, ரத்தம் உறைவதால் மாரடைப்பு, மூளை பாதிப்பு ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடுமையான குளிரிலிருந்த நோயாளிகளை காக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

டெல்லியிலும்  கடும் குளிர் - வானிலை மையம் எச்சரிக்கை

தலை நகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. புத்தாண்டுக்குப் பிறகு ஒரு வார காலத்திற்கு டெல்லியில் வெப்பத்தின் அளவு கடுமையாக சரிவை சந்திக்கும் என ஏற்கனவே இந்திய வானிலையாய்வு மையம் எச்சரிக்கை விட சிறந்த நிலையில் டெல்லியில் உள்ள சில பகுதிகளில் இன்று 1.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லா மற்றும் முத்ரா கண் மாநிலம் முசோரி உள்ளிட்ட மலை வாசல் தளங்களை விட டெல்லியில குறைவான வெப்பநிலை பதிவாகி வருகிறது.

இதனை அடுத்து டெல்லிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் பிறப்பித்துள்ளது மேலும். ஜனவரி 10ம் தேதிக்கு பிறகு படிப்படியாக குளிர் அலை குறைந்து மார்ச் மாதம் முதல் வாரத்தில் இயல்பு நிலை படிப்படியாக திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com