பட்ஜெட் 2019: பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி

பட்ஜெட் 2019: பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி

பட்ஜெட் 2019: பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி
Published on

சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்தார்.

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். 
அப்போது அவர் கூறும்போது, ‘’ சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. தங்கத்தின் இறக்குமதி மீதான வரி 10 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதமாக உயர்த்தப்படும். ராணுவ தளவாட இறக்குமதிக்கு சுங்க வரி இல்லை. மின்சார வாகன பயன்பாட்டுக்கு ஊக்கம் தரப்படும். பாமாயிலுக்கு வழங்கப்பட்டு வந்த இறக்குமதி வரிச்சலுகை ரத்து செய்யப்படுகிறது’’ என்று அறிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com