இந்தியா
வங்கதேசம் சென்றார் சுஷ்மா: ரோஹிங்யா அகதிகள் பற்றி பேச வாய்ப்பு
வங்கதேசம் சென்றார் சுஷ்மா: ரோஹிங்யா அகதிகள் பற்றி பேச வாய்ப்பு
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரண்டு நாள் பயணமாக வங்கதேச தலைநகர் டாக்கா சென்று சேர்ந்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்துடன் இருதரப்பு உறவை வலிமைப்படுத்தும் நோக்கத்தில் அந்நாட்டுக்கு சுஷ்மா பயணம் மேற்கொண்டுள்ளார். டாக்கா விமான நிலையத்தில் சுஷ்மாவை வங்க தேச வெளியுறவு அமைச்சர் முகமது அலி வரவேற்றார். வங்கதேச தலைவர்களுடன் சுஷ்மா ஸ்வராஜ் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் ரோஹிங்யா அகதிகள் வருகை மற்றும் பீகாருடன் பிரச்னைக்குரிய தீஸ்தா நதி ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.