\
டெல்லி: காசிப்பூர் மலர்ச்சந்தையில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

டெல்லி: காசிப்பூர் மலர்ச்சந்தையில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

டெல்லி: காசிப்பூர் மலர்ச்சந்தையில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
Published on

தலைநகர் டெல்லியின் எல்லையில் உள்ள காசிப்பூர் மலர்ச்சந்தையில், வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் பை ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற அதிகாரிகள் பையை சோதனையிட்டதில், அதனுள் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன.

குடியரசு தின கொண்டாட்டத்திற்கு இரு வாரங்களே உள்ள நிலையில், தலைநகரின் எல்லைப் பகுதியில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காசிப்பூர் மலர்சந்தையை ஒட்டிய பகுதிகள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இந்த சதிச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com