கேரளா | பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து... ஒருவர் பலி; பலர் காயம்... அதிக வெப்பத்தால் விபத்தா?

கேரளா எர்ணாகுளம் மாவட்டம் திருப்பூணித்துறையில் உள்ள படக்காபுரம் பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் பட்டாசு வெடித்ததில் தரைமட்டமான வீடுகள்
கேரளாவில் பட்டாசு வெடித்ததில் தரைமட்டமான வீடுகள்Twitter

மத்தியப் பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் மகர்தா சாலையில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 6-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், 60 மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்ததாகவும் தகவல் வெளிவந்து அனைவரையும் அதிர்சியடைய செய்திருந்தது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாக அதே போல் ஒரு நிகழ்வு நம் அண்டை மாநிலமான கேரளாவில் இன்று நடந்துள்ளது.

அதன்படி கேரளா எர்ணாகுளம் மாவட்டம் திருப்பூணித்துறையில் உள்ள படக்காபுரம் பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 12 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சமீபத்திய தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக களமசேரி மருத்துவக் கல்லூரியிலும், திருப்பூணித்துறை தாலுகா மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் பலியானவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கேரளா பட்டாசு ஆலை விபத்து
கேரளா பட்டாசு ஆலை விபத்து

பட்டாசு ஆலைக்கு அருகில் குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்திருக்கின்றன. அதிக சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்ட சமயம் அங்கிருந்த மக்கள் முதலில் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக நினைத்துள்ளனர். தொடர்ந்து வெடிசத்தம் வந்ததும் நிலைமையின் தீவிரம் அவர்களுக்கு புரிந்துள்ளது. அதற்குள் தீ மளமளவென அருகில் இருக்கும் வீடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வெடிவிபத்தால், புதியகாவு வடக்குபுரம் பகுதியில் குறைந்தது 25 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அங்குள்ள ஊடகமான மலையாள மனோரமா தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பின் தாக்கம் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் உணரப்பட்டுள்ளதாகவும், இந்த வெடிவிபத்தில் வாகனம் ஒன்று எரிந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் பட்டாசு வெடித்ததில் தரைமட்டமான வீடுகள்
ம.பி | பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து... 6 பேர் உயிரிழப்பு; 60-க்கும் மேற்பட்டவர்கள் காயம்

படகாபுரம் பட்டாசு ஆலையில் தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது தற்போதுவரை தெரியவரவில்லை. இருப்பினும், கடும் வெப்பத்தினால் இவ்விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற முதற்கட்ட தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக இங்கிருக்கும் குடோனில் புதியகாவு கோவில் திருவிழாவிற்கு பயன்படுத்தபட இருக்கும் பட்டாசு வகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

கேரளா பட்டாசு ஆலை வெடிவிபத்து
கேரளா பட்டாசு ஆலை வெடிவிபத்து

இந்நிலையில் வாகனத்தில் இருந்து பட்டாசுகளை இறக்கும் போது இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளாவில் பட்டாசு வெடித்ததில் தரைமட்டமான வீடுகள்
பட்டாசு வெடிவிபத்து: மாற்றுத்திறனாளியான தந்தையை காப்பாற்றி தன் உயிரை விட்ட சிறுவன்

சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவுகளுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com