திமுக கூட்டணிக்கு 38 இடங்கள்? - கருத்துக்கணிப்பு முடிவுகள்
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்று மாலை 6 மணியோடு நிறைவடைந்தது. இந்நிலையில் தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், திமுக கூட்டணி 34 முதல் 38 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. அத்துடன் அதிமுக கூட்டணி 0 விலிருந்து 4 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவைக்கு எந்த இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

