தெலங்கானாவில் ஆட்சியை பிடிப்பது யார்..கருத்துக்கணிப்பு முடிவுகளால் கலக்கத்தில் பிஆர்எஸ் - காங்கிரஸ்!

தெலங்கானா மாநிலத்தின் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது.
தெலங்கானா
தெலங்கானாட்விட்டர்

மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இறுதியாக, இன்று (நவ.30) தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், மாலை 5 மணி நிலவரப்படி 63.94 சதவீத வாக்குகள் அம்மாநிலத்தில் பதிவாகியுள்ளன. அம்மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.), பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தின் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது.

சிஎன்என் மற்றும் டிவி 9 கருத்துக்கணிப்பின்படி, தெலங்கானாவில் இழுபறி நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎன்என் கருத்துக்கணிப்புப்படி,

ஆளும் பி.ஆர்.எஸ். 58

காங்கிரஸ் 56

பாஜக 10

டிவி 9 கருத்துக்கணிப்புப்படி,

ஆளும் பி.ஆர்.எஸ். 48 - 58

காங்கிரஸ் - 49 -59

பாஜக 5 - 10

ஜன் கி பாத் டிவியின் கருத்துக்கணிப்புப்படி,

ஆளும் பி.ஆர்.எஸ். 40 - 55

காங்கிரஸ் - 48 -64

பாஜக 7 - 13

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com