ராஜஸ்தான்: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்.. தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் யாருக்கு அதிர்ச்சி?

ராஜஸ்தான் மாநிலத்தின் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் கோப்புப் படம்

மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல்
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல்முகநூல்

200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில், 199 தொகுதிகளுக்கு கடந்த நவ.25ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கரம்பூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குருகுத் சிங் காலமானதால், அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது.

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின்படி,

காங்கிரஸ் 56 - 72

பாஜக 108 - 128

பிற 13 - 22

சிஎன்என் கருத்துக்கணிப்பின்படி,

காங்கிரஸ் 74

பாஜக 111

பிற 24

ராஜஸ்தான்
ராஜஸ்தான்ட்விட்டர்

டிவி 9 கருத்துக்கணிப்பின்படி,

காங்கிரஸ் 90 - 100

பாஜக 100 - 110

ஜன் கி பாத் கருத்துக்கணிப்புப்படி,

காங்கிரஸ் 62 - 85

பாஜக 100 - 122

இந்தியா டுடே கருத்துக்கணிப்புப்படி,

காங்கிரஸ் 86 - 106

பாஜக 80 - 100

பிற 9 - 18

ஜி போல்ஸ்டார்ட் கருத்துக்கணிப்புப்படி,

காங்கிரஸ் 9 - 100

பாஜக 100 - 110

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com