ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் V/s தெலுங்கு தேசம் கடும் போட்டி - இறுதிக் கருத்துக்கணிப்பு

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் V/s தெலுங்கு தேசம் கடும் போட்டி - இறுதிக் கருத்துக்கணிப்பு
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் V/s தெலுங்கு தேசம் கடும் போட்டி  - இறுதிக் கருத்துக்கணிப்பு

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்ற நிலையில், அங்கு ஆட்சியமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்படுகிறது. ஆந்திராவில் மொத்தமாக 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 130 முதல் 135 இடங்களில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தெலுங்குதேசம் கட்சி 37 முதல் 40 இடங்களிலே வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ஜி பிளாஷ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி தெலுங்கு தேசம் கட்சி 90 முதல் 110 இடங்களில் வெற்றி பெறும் எனவும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 65 முதல் 79 இடங்களில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மற்றவை 1 முதல் 5 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல ஆந்திராவில் மொத்தமாக 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் ரிபப்ளிக்- சிஓட்டர் கருத்துக் கணிப்பின்படி, தெலுங்குதேசம் 14 இடங்களிலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், மற்றவைகளுக்கு வாய்ப்பு இல்லை எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி, தெலுங்குதேசம் 4 முதல் 6 இடங்களிலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 18 முதல் 20 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சாணக்யா- நியூஸ்24 நடத்திய கருத்துக் கணிப்பின்படி, தெலுங்கு தேசம் 17 இடங்களிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நியூஸ்18 வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், தெலுங்கு தேசம் 11 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com