அசத்தும் கூகுள் : இந்தியாவுக்கென பிரத்யேக கூகுள் மேப்ஸ்...!

அசத்தும் கூகுள் : இந்தியாவுக்கென பிரத்யேக கூகுள் மேப்ஸ்...!

அசத்தும் கூகுள் : இந்தியாவுக்கென பிரத்யேக கூகுள் மேப்ஸ்...!
Published on

பல்வேறு பிரத்யேக வசதிகளுடன் இந்தியாவுக்கென கூகுள் வரைபட சேவையை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரயில், மெட்ரோ ரயில், பேருந்துகளின் கால அட்டவணை உள்ளிட்ட பல்வேறு பிரத்யேக வசதிகளுடன் கூடிய கூகுள் மேப்ஸை அறிமுகபடுத்தயுள்ளதாக  கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறுகையில், உலகிலேயே முதல்முறையாக இந்தியாவுக்கான பிரத்யேக வரைபட சேவையில், இருசக்கர வாகன வழிகாட்டுதல் இடம்பெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பதிவு செய்யப்படும் வாகனங்களில் இருசக்கர வாகனங்கள் 70 சதவிகித பங்கு வகிக்கும் நிலையில், அவற்றுக்கான வழிகாட்டுதல் பெரும் வரவேற்பைப் பெறும் என அந்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


மேலும் கார், பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத வழித்தடங்கள் மூலம் விரைவாக இருசக்கர வாகனத்தில் செல்லும் வழியாக அது இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 12 ஆயிரம் ரயில்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மெட்ரோ ரயில் ஆகியவற்றின் கால அட்டவணையையும் கூகுள் வரைபட சேவையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com