கலால் வரி குறைப்பு: புதுச்சேரியில் வெகுவாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை

கலால் வரி குறைப்பு: புதுச்சேரியில் வெகுவாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை
கலால் வரி குறைப்பு: புதுச்சேரியில் வெகுவாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை

மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை குறைத்ததை அடுத்து புதுச்சேரி அரசும் பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை குறைத்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலை வெகுவாக குறைந்தது.

மத்திய அரசு நேற்று கலால் வரியை குறைத்ததன் மூலம் பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலையை 10 ரூபாயும் குறைத்தது. இந்நிலையில் புதுச்சேரி அரசு சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை ஏழு ரூபாய் குறைத்துள்ளது. புதுச்சேரி அரசு இந்த வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசும், டீசல் விலை 19 ரூபாயும் குறையும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 1 லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 92 காசுகளாகவும் டீசல் 83 ரூபாய் 57 காசுகளாகவும் குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com