\
வாஜ்பாயின் உடல் நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ் தகவல் !

வாஜ்பாயின் உடல் நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ் தகவல் !

வாஜ்பாயின் உடல் நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ் தகவல் !
Published on

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலைநிலை திங்கள்கிழமை மோசமடைந்தது. இதனையடுத்து நேற்று அவர் டெல்லி எய்ம்ஸை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாஜ்பாய்க்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

இதனையடுத்து அவரை பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் நேரில் நலம் விசாரித்தனர்.இந்நிலையில் வாஜ்பாய் உடல்நலம் குறித்த அறிக்கையை எய்ம்ஸ் இன்று வெளியிட்டது அதில் " வாஜ்பாய் உடல் நிலை சீராக இருக்கிறது. அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் மருந்துகள் செலுத்தப்படுகிறது. அவரின் உடல்நிலை முன்னேறும் வரை மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com