\
”இனி நான் பாஜக-ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்” சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்ட நபர் அறிவிப்பு

”இனி நான் பாஜக-ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்” சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்ட நபர் அறிவிப்பு

”இனி நான் பாஜக-ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்” சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்ட நபர் அறிவிப்பு
Published on

மும்பையில் சிவசேனாவுக்கு எதிரான தகவலை பகிர்ந்ததாக அக்கட்சியினரால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி பாஜகவில் இணைந்ததாக அறிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி மதன் ஷர்மா. இவர் கடந்த வாரம் குறுஞ்செய்தி ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அது சிவ சேனா கட்சியினருக்கு எதிரான சித்திரப்படமாக இருந்திருக்கிறது. இதையடுத்து மதன் ஷர்மாவிற்கு சிலர் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து மதன் ஷர்மாவின் வீட்டிற்கு வந்த உள்ளூர் சிவசேனா தலைவர் கம்லேஷ் கதாம் உள்ளிட்ட 6 பேர் அவர் மீது தாக்குதல் நடத்தினர். அத்துடன் மதன் ஷர்மா பாஜக-ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவான நபர் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேட்டியளித்துள்ள மதன் ஷர்மா, இந்த நிமிடத்தில் இருந்து தான் பாஜக-ஆர்எஸ்எஸ்-ல் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com