\
ராஷ்ட்ரீய லோக் தள கட்சியின் தலைவர் அஜித்சிங் காலமானார்!

ராஷ்ட்ரீய லோக் தள கட்சியின் தலைவர் அஜித்சிங் காலமானார்!

ராஷ்ட்ரீய லோக் தள கட்சியின் தலைவர் அஜித்சிங் காலமானார்!
Published on

ராஷ்ட்ரீய லோக் தள கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித்சிங் காலமானார்.

ராஷ்ட்ரீய லோக் தள கட்சியின் தலைவர் அஜித்சிங், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி இன்று காலமானார்.

வி.பி.சிங், பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன்சிங், அமைச்சரவையில் இவர் இடம்பெற்றிருந்தார். முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் மகனான அஜித்சிங் 7 முறை மக்களவை எம்பியாக இருந்தவர். அஜித்சிங் உத்திரபிரதேச அரசியலில் நுழையும் முன் அமெரிக்காவில் 15 ஆண்டுகள் கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றி இருந்தார்.

அஜித் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com