“இனி அரசியலில் தொடர விரும்பவில்லை?” - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி
அரசியலைவிட்டு விலகலாமா என யோசித்து வருவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபையில் சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வியடைந்தது. முதல்வர் பதவியில் இருந்து குமாரசாமி ராஜினாமா செய்தார். பின்னர், எடியூரப்பா தலைமையிலான அரசு பொறுப்பேற்றது.
இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக குமாரசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியபோது, “எதிர்பாராத விதமாக அரசியலுக்கு வந்த நான் எதிர்பாராத விதமாக முதல்வர் ஆனேன். இரண்டு முறை முதல்வர் ஆவதற்கு கடவுள் எனக்கு வாய்ப்பு வழங்கினார்.
யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியமில்லை. மாநில வளர்ச்சிக்காக 14 மாதங்கள் நன்றாக வேலை செய்தேன். என்னை அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ விடுங்கள். இனியும் அரசியலில் தொடர விரும்பவில்லை; மக்கள் மனதில் ஒரு இடம் கிடைத்தால் போதும்” என தெரிவித்துள்ளார்.