சத்தீஸ்கர் | முன்னாள் முதல்வரின் மகன் கைது.. அமலாக்கத் துறை அதிரடி!
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பகேலின் மகன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானக் கொள்கை விவகாரத்தில் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா பகேல் மீது வழக்குப்பதிந்த அமலாக்கத்துறையினர், அவரை கைது செய்தனர்.
பூபேஷ் பகேல் சத்தீஸ்கர் காங்கிரஸின் முகமாக இருந்து வருபவர். சத்தீஸ்கர் மாநிலம் உருவாகி, 2003 ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் தொடங்கி, 2018 ஆம் ஆண்டு வரை அங்கு பாஜகவே வென்று வந்தது. இந்தசூழலில், 2014 ஆண்டு சத்தீஸ்கர் காங்கிரஸின் தலைமை பொறுப்பினை ஏற்ற பூபேஷ் பகேல், 2018 ஆம் காங்கிரஸை அரியணை ஏற்றினார். அந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெல்ல, பூபேஷ் பகேல் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். தற்போது, பஞ்சாப் காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராகவும் அவர் இருந்து வருகிறார்.