இதயங்களை வென்ற காதல் கடிதம்.. முன்னாள் ராணுவ அதிகாரி பகிர்ந்த காதல் கடிதத்தின் வீடியோ இதோ..!
முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் தர்மவீர் சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த காதல் கடிதத்தின் வீடியோ, பலரின் இதயங்களை வென்றுள்ளது. 2001ல் சென்னையில் பயிற்சி பெற்றபோது, அவரது அப்போதைய காதலியும் தற்போதைய மனைவியுமான தாகுரைன் எழுதிய கடிதம், அதனைப் பெற அவர் சந்தித்த சுவாரஸ்யமான போராட்டத்தால் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.
முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் பகிர்ந்த காதல் கடிதத்தின் காணொளி, பலரின் இதயங்களை வென்றிருக்கிறது. கேப்டன் தர்மவீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்றபோது அவரது அப்போதைய காதலியும், தற்போதைய மனைவியுமான தாகுரைன் எழுதிய காதல் கடிதத்தின் காணொளியை பகிர்ந்துள்ளார்.
2001 டிசம்பர் 10ஆம் தேதியிட்ட அந்த கடிதம், இணையவாசிகள் பலரின் இதயங்களை வென்றிருக்கிறது. காரணம், அந்த கடிதத்தை பெற தர்மவீர் சிங் சந்தித்த போராட்டம் சுவாரஸ்யமானது. அகாடமியில் பயிற்சி பெறுவர்கள் தங்கள் சீனியர்களிடம் இருந்து கடிதங்களை பெறுவதற்கு புஷ்- அப்களை செய்ய வேண்டியிருந்ததை அவர் குறிப்பிட்டுள்ளார். கடிதம் நீளமாக இருந்தால் தண்டனை கடுமையாக இருக்கும் என கூறியுள்ள தர்மவீர் சிங், தனக்கு வந்த காதல் கடிதம் மிக நீளமாக இருந்ததால் 500 புஷ்-அப்களை செய்து கடிதத்தை பெற்றதாகவும் நினைவு கூர்ந்துள்ளார்.
நான் நவம்பர் 1, 2001 அன்று அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் சேர்ந்தேன். அடுத்த மாதமே அதாவது டிசம்பர் 1ஆம் தேதி 2001 அன்று எனக்கு கடிதம் வந்தது.. அதுதான் என் முதல் கடிதம் என்றும் இது போல நீங்க யாருக்காவது கடிதம் எழுத்ருக்கீங்களா? என்ற கேள்வியையும் இன்ஸ்டா பக்கத்தில் உள்ளவர்களை பார்த்து கேட்டுள்ளார்..