‘மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைந்தால் 6 மாதம் கூட தாங்காது’  - நிதின் கட்காரி

‘மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைந்தால் 6 மாதம் கூட தாங்காது’  - நிதின் கட்காரி
‘மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைந்தால் 6 மாதம் கூட தாங்காது’  - நிதின் கட்காரி

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என பாரதிய ஜனதா விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி, இந்த சந்தர்ப்பவாத கூட்ட‌ணி 6 முதல் 8 மாதங்கள் கூட தாக்குப் பிடிக்காது என்று கூறியுள்ளார். கொள்கை முரண்பாடு கொண்ட இந்தக் கட்சிகள், பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் ஒரே நோக்கில் ஒன்று சேர்வதாகவும் கட்கரி விமர்சித்துள்ளார். 

இதற்கிடையே, சிவசேனா கட்சி எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் சிவசேனா தலைவர்கள்‌ சிலர் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com