Ethiopian Airlines B787 Dreamliner suffers mid-air depressurisation
Ethiopian Airlines flight x page

நடுவானில் காற்றழுத்த தாழ்வு நிலை.. அவசரமாக தரையிறக்கப்பட்ட எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் ட்ரீம்லைனர்!

நடுவானில் ஏற்பட்ட கோளாறு விமானம் அவசர தரையிறக்கம் 7 பேருக்கு உடல்நலக்குறைவு
Published on

நடுவானில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதால் மும்பை நோக்கிச் சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் ட்ரீம்லைனர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் 7 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். என்ன நடந்தது என பார்க்கலாம்.

மும்பைக்குச் சென்று கொண்டிருந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை 1:42 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. நடுவானில் ஏற்பட்ட கேபின் காற்றழுத்த தாழ்வு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதனை அடுத்து ஏழு பயணிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அடிஸ் அபாபாவிலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் மும்பைக்கு வந்தபோது ஏழு பயணிகளுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. decompression symptoms காரணமாக ஒரு பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போயிங் 787 ட்ரீம்லைனர் (பதிவு ET-AXS) மூலம் இயக்கப்படும் ET640 விமானத்தில், அரேபிய கடலுக்கு மேல் 33,000 அடி உயரத்தில் பயணித்தபோது இந்த சம்பவம் நடந்தது. விமானத்தில் கேபின் அழுத்தம் இழப்பு ஏற்பட்டதால், விரைவாக இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக Flightradar24 தரவுகள் தெரிவிக்கின்றன. கேபின் டிகம்பரஷ்யூரைசேஷன் ( Cabin depressurisation ) என்பது விமான கேபினுக்குள் காற்று அழுத்தம் இழப்பைக் குறிக்கிறது. விமானங்கள் இயற்கையான ஆக்ஸிஜன் அளவுகள் குறைவாக இருக்கும் உயரத்தில் பறக்கின்றன. அங்கு மனிதர்கள் உயிர்வாழ முடியாத அளவுக்கு சூழல் இருக்கும். பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, என்ஜின்களில் இருந்து வரும் காற்றைப் பயன்படுத்தி கேபின் சீல் வைக்கப்பட்டு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது குளிர்ந்து புதிய ஆக்ஸிஜனுடன் கலக்கப்பட்டு சுவாசிக்கக்கூடிய நிலைமைகளைப் பராமரிக்கப்படுகிறது.

technical fault அல்லது structural issue காரணமாக இந்த அமைப்பு செயலிழந்தால், கேபினுக்குள் காற்று அழுத்தம் திடீரென குறைகிறது. இது தலைச்சுற்றல், குமட்டல், மூச்சுத் திணறல் அல்லது சுயநினைவு இழப்பு போன்ற சாத்தியமான அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.

இதுபோன்ற நிகழ்வுகளில், விமானம் பாதுகாப்பான உயரத்திற்கு இறங்கும் வரை பயணிகள் சுவாசிக்க உதவும் வகையில் oxygen masks தானாகவே overhead compartments -ல் இருந்து விரிவடைகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை ஏற்கனவே கவனமுடன் இருக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com