மக்களவையில் பேச லஞ்சம்: மஹுவா மீதான பரிந்துரை நாளை தாக்கல்? எம்.பி. பதவி பறிபோகுமா?

மஹுவா மொய்த்ரா மீதான பரிந்துரை நாளை, மக்களவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ராட்விட்டர்

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா விசாரணையை எதிர்கொண்டார். இதுதொடர்பாக, மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை, கடந்த நவம்பர் 9ஆம் தேதி வெளியிட்டது.

அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன், நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் பரிந்துரை, நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது டிசம்பர் 22ஆம் தேதிவரை நடைபெறும் எனத் தெரிகிறது.

மஹுவா மொய்த்ரா
மக்களவையில் பேச லஞ்சம் பெற்றதாக புகார்: தகுதி நீக்கம் ஆகிறரா திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா?

இந்தச் சூழலில்தான் மஹுவா மொய்த்ரா மீதான பரிந்துரை நாளை, மக்களவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் வினையாற்றக்கூடும் என்பதால், பாஜக உறுப்பினர்கள், நாளை அதிகளவில் சபையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மஹுவா மீதான இந்த பரிந்துரை குறித்து மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பரிந்துரை நிறைவேற்றப்பட்டால், மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி பறிக்கப்படும்.

முன்னதாக, இதன்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 6-4 என்ற கணக்கில் பரிந்துரை நிறைவேறியது. இதன் கூட்டத்தில், மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக 6 பேரும், எதிராக 4 பேரும் வாக்களித்ததால், 6:4 என்ற விகிதத்தில் அவர்மீதான குற்றச்சாட்டுகளை விசாரணைக்குழு ஏற்றுக்கொண்டது.

இதையும் படிக்க: மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்: ஐந்தரை ஆண்டு காத்திருப்புக்குப் பின் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com