Eshwarappapt desk
இந்தியா
“மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அரசியல் செய்கிறது” கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா
மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அரசியல் செய்கிறது என கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “கர்நாடக மாநிலம் சிமோகா தொகுதியில் அண்ணாமலை பிரசாரம் செய்ததால் அத்தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது.
Eshwarappapt desk
மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அரசியல் செய்கிறது. இரு மாநில மக்களுக்கும் தண்ணீர் அத்தியாவசியமானது, முக்கியமானது. காங்கிரஸ் நடவடிக்கைகள் நாட்டின் நலனுக்கு உகந்தல்ல” என்றார்.