\
இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம் - ராகுல்காந்தி

இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம் - ராகுல்காந்தி

இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம் - ராகுல்காந்தி
Published on: 

இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம் என ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்

‘நாதுராம் கோட்சே’ ஒரு தேசபக்தர் என நேற்று நாடாளுமன்றத்தில் பிரக்யா சிங் தாக்கூர் கூறினார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவர் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளது. அதன்படி பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா சிங் தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள ராகுல்காந்தி, ''தீவிரவாதி கோட்சேவை தீவிரவாதி பிரக்யா தேசபக்தர் என்று கூறியுள்ளார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம்'' என குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com