\
EPFO SWP Scheme: How to Get Monthly Income from PF After Retirement
EPFO's New SWP Scheme: Get Monthly Income from Your PF Savings After RetirementAI

ஓய்வு பெறப் போகிறீர்களா? இனி PF பணத்தில் மாதந்தோறும் வருமானம்! EPFO-வின் புதிய SWP திட்டம்!

retire ஆக போறீங்களா? ஓய்வுக்குப் பிறகு PF பணத்தை மொத்தமாக எடுக்க வேண்டாம்! இனி மாதந்தோறும் வருமானம் பெறும் புதிய SWP திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது EPFO. இந்தத் திட்டத்தில் பணம் பெறுவது எப்படி? யாரெல்லாம் பயனடையலாம்?
Published on: 

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதியான PF சேமிப்புத் தொகையை ஒரே நேரத்தில் பெறுவதற்குப் பதிலாக, மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் தவணை முறையில் பெற்றுக்கொள்ளும் திட்டத்துக்கு EPFO தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. Systematic Withdrawal Plan (SWP) எனப்படும் இந்தத் திட்டம், ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் பெற உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற EPFO-வின் மத்திய அறங்காவலர் குழுவான CBT-யின் 240-வது கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வுபெற்றவர்கள் தங்களது PF சேமிப்பை மாதந்தோறும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தவணைகளாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போதைய நடைமுறையின்படி, 58 வயதை எட்டிய உறுப்பினர்கள் தங்களது PF கணக்கில் உள்ள முழு சேமிப்புத் தொகையையும் ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், புதிய SWP திட்டத்தின் மூலம் மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. மீதமுள்ள சேமிப்புத் தொகை EPF கணக்கில் தொடர்ந்து இருந்து, அதற்கான வட்டியையும் ஈட்டித்தரும்.

EPFO SWP Scheme: How to Get Monthly Income from PF After Retirement
EPFO SWP Scheme: How to Get Monthly Income from PF After RetirementAI

இந்தத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களுக்கு மூன்று வகையான வாய்ப்புகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

முதலாவதாக, PF கணக்கில் உள்ள மொத்த சேமிப்புத் தொகையையும் மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் தவணைகளாகப் பெற்றுக்கொள்ளலாம்.

இரண்டாவதாக, சேமிப்புத் தொகையில் ஒரு பகுதியை உடனடியாகப் பெற்றுக்கொண்டு, மீதமுள்ள தொகையைத் தவணை முறையில் பெறலாம்.

மூன்றாவதாக, PF கணக்கில் உள்ள அசல் தொகையை அப்படியே வைத்துக்கொண்டு, அதற்குக் கிடைக்கும் வட்டியை மட்டும் தவணை முறையில் பெற்றுக்கொள்ளலாம்.

PF கணக்கில் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாகச் சேமித்துள்ள சுமார் 6.32 லட்சம் 55 வயதை கடந்த உறுப்பினர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயனடைவர் என EPFO மதிப்பிட்டுள்ளது.

மேலும், SWP திட்டத்தின் கீழ் பணம் பெற்றுக்கொண்டிருக்கும்போது உறுப்பினர் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினர் மீதமுள்ள தொகையை மொத்தமாகப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தவணை முறையில் தொடர்ந்து பெறலாம்.

EPFO SWP Scheme: How to Get Monthly Income from PF After Retirement
EPFO SWP Scheme: How to Get Monthly Income from PF After RetirementAI

முக்கியமாக, இந்தத் திட்டம் விருப்பத்தின் அடிப்படையிலானது. இதற்கான முழுமையான நடைமுறை விதிமுறைகள் மற்றும் செயல்படுத்தும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு தேவையான EPF திட்டத் திருத்தங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் ஓய்வுக்காலத்தில் PF சேமிப்பை ஒரே தொகையாகப் பெறுவதற்குப் பதிலாக, தொடர்ந்து வருமானம் தரும் ஆதாரமாக மாற்றும் புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.