நாகாலாந்து விவகாரம் : “பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” - மம்தா பானர்ஜி
நாகாலாந்து மாநிலத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் மீதே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது.
அதே நேரத்தில் இந்த சம்பவத்தால் அங்கு ஏற்பட்ட வன்முறையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Worrisome news from #Nagaland.

Heartfelt condolences to the bereaved families. I pray for the speedy recovery of those who were injured.

We must ensure a thorough probe into the incident and ensure that all victims get justice!
— Mamata Banerjee (@MamataOfficial) December 5, 2021

“நாகாலாந்து சம்பவம் மிகவும் கவலை அளிக்கிறது. தங்களது உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை வேண்டும். அதே போல பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார் மம்தா பானர்ஜி.