\
காஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் இருவர் உயிரிழப்பு

காஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் இருவர் உயிரிழப்பு

காஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் இருவர் உயிரிழப்பு
Published on

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படையினர் இருவர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்ரில் உள்ள நாகபல் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து துணை ராணுவப் படையினரும், காவல்துறையினரும் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். ராணுவத்தினரை கண்டவுடன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைப்பெற்றது. இதில் பாதுகாப்புப் படையை சேர்ந்த இரு வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் நான்கு பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களை ராணுவத்தினர் கைப்பற்றினர். இந்த சண்டையில் பாதுகாப்புப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com