காஷ்மீரில் கடும் மோதல்: 2 பயங்கரவாதிகள் பலி

காஷ்மீரில் கடும் மோதல்: 2 பயங்கரவாதிகள் பலி

காஷ்மீரில் கடும் மோதல்: 2 பயங்கரவாதிகள் பலி
Published on

காஷ்மீரில், பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில், ஹஜின் பகுதியில் உள்ள மிர் மொஹல்லா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பயங்கர வாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதற்குள் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். அதிகாலையில் இருந்து நீண்ட நேரம் தொடர்ந்த இந்தச் சண்டையில் பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.


 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com