\
கர்நாடகா
கர்நாடகாமுகநூல்

வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்த முடிவெடுத்துள்ளதா கர்நாடகா அரசு?

கர்நாடகாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்தும் முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Published on

நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக பெங்களூரு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் விளங்கி வருகின்றன. ஐ.டி.துறையில் பணியாற்றுவோருக்கான வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்தும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில தொழிலாளர் நலத்துறை, அண்மையில் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இந்நிலையில், 14 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தினால், அது ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இது மனிதநேயமில்லாத செயல் எனவும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா
சென்னை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறு - இளைஞர் குத்தியதில் கொத்தனார் உயிரிழப்பு

ஏற்கனவே, கூடுதல் வேலை நேரத்தால், மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வரும் ஊழியர்களுக்கு, 14 மணி நேர வேலை என்பது, மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர். கர்நாடக அரசின் முடிவால், 20 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், சட்டத்திருத்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com